Take a fresh look at your lifestyle.

இனிமேல் தமிழ்ராக்கர்ஸ் லிங்-ஐ சமூக வலை தளங்களில் பகிந்தாலே தண்டனையா?

219

தமிழ்ராக்கர்ஸ் போன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்ட திருத்த மசோதா ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்திய சினிமாவில் பைரசி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய திரைப்படங்கள் வெளியான அன்றே அந்தப் படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடப்படுகின்றது.

இத்தகைய பைரசி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரி வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

எனினும், இது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில், இதனை தடுக்க ஏற்கனவே உள்ள சட்டத்தை கடுமையாக்கும் வகையில் புதிய உட்பிரிவை சேர்த்து மத்திய அரசு புதிய சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளது.

இதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய படங்கள் வெளியாகும் போது அதனை தமிழ்ராக்கர்ஸ் போன்ற தளங்களில் பதிவிறக்கம் செய்து சிலர் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்புகின்றனர். பலர் அந்த தளத்தின் லிங்க்-ஐ பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய மசோதாவில் அம்சம் இருப்பதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன

Comments are closed.