Take a fresh look at your lifestyle.

பிக் பாஸ் சுஜா நீதிமன்றத்தில்! – என்ன கொடுமைடா இது?

63

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் கமல் போட்டியாளர்களிடம் இந்த வார அனுபவத்தை கேட்பார். கடந்த சில வாரங்கள் சண்டைசச்சரவு போன்ற பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த வாரம் பெரியளவில் எந்த ஒரு பிரச்சனைகள் இல்லாமல் சென்றது.

இந்நிலையில் இன்று கமல் என்ன வீடு சந்தோசமாக போகிறதே என்று ஒரு புது விளையாட்டை தொடங்கினார். என்னவென்றால் வீட்டுக்குள் ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி போட்டியாளர்களிடம் தங்களுக்குள் மற்றவர்களை பற்றி இருக்கும் புகாரை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்று கமல் கூறினார்.

அதன் அடிப்படையில் இன்று காஜல் வக்கீலாக இருந்து புகார் சுமத்தப்பட்ட சுஜாவிடம் ஏன் நீங்கள் ஓவியா போல் நடந்து கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நான் இயல்பிலே அப்படி தான், என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு எல்லாருக்கும் தெரியும் என கூறினார், இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஓவியா போல் தான் நடந்து கொள்கிறார் என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.