Take a fresh look at your lifestyle.

அவரை பார்த்து வியந்தேன் : அஜித் புகழ் பாடும் ஹாலிவுட் நடிகை

83

எளிமை , நேர்மை , தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு இவையனைத்தும் ஒன்றாக இணைந்த ஒட்டுமொத்த உருவம் தான் அஜித். தான் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள பெரிய நடிகர் என்ற தலைக்கனம் இல்லாமல் அனைவருடனும் சகஜமாக ,எளிமையாக பழக்கக்கூடியவர் அஜித். அஜித்தை ஒருதடவை சந்தித்தவர்கள் அதன் பின் அஜித் புகழ் பாடத்தவறுவதில்லை. இந்தப்பட்டியலில் இப்போது ஹாலிவுட் நடிகை ஒருவரும் இணைந்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் புதியபடம் விவேகம். ஸ்டைலிஷாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெகிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் மூலம் அமிலா டெர்ஜிமெகிக் இந்திய சினிமாவில் காலடிவைத்துள்ளார்.

விவேகம் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் பற்றி அமிலா டெர்ஜிமெகிக் கூறும் போது, அஜித்தை நான் இந்திய சினிமாவில் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் எளிமையாக பழகினார். ஆபத்தான சண்டை காட்சிகளில் டூப் வேண்டாம் என்று தானே நடித்து அசத்தலாக செய்தார். அவரது எளிமையைக் கண்டு வியந்தேன். சினிமாவுக்காக அவர் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் .மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே என்று கூறியுள்ளார்.

மேலும் விவேகம் படம் இந்திய சினிமாவில் விவேகம் படம் ரசிகர்களால் ரசித்து கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளாராம். அமிலா டெர்ஜிமெகிக் அஜித்தை புகழ்ந்து பேசியது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்துள்ளதாம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.