Take a fresh look at your lifestyle.

ஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்

157


தல அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சு தூக்கு ‘பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான ஐந்தே நிமிடங்களில் #AdchiThooku, #Viswasam1stSingle, #ViswasamPongal2019 ஆகிய மூன்று ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டுக்கு வந்துவிட்டது.

அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இதுகுறித்து டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டே இருப்பதால் டுவிட்டர் இணையதளமே பரபரப்பில் உள்ளது. இந்த பாடல் வெளியாக இன்னும் சுமார் மூன்று மணி நேரம் இருப்பதால் அதுவரை இந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.